திருப்பதியில் தமிழக பக்தரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த இருவர் கைது

திருப்பதியில் தமிழக பக்தரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த இருவர் கைது
கோப்புப் படம்
  • Share this:
திருப்பதி திருமலை வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு நடைபயணமாக திரும்பி வந்த தமிழக பக்தரை தாக்கி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

செம்மஞ்சேரி ஹவுஸிங்போர்டை சேர்ந்த செந்தில் என்பவர் வெங்கடேச பெருமாள் கோயிலில் மொட்டை அடித்து காணிக்கையைச் செலுத்திவிட்டு வீடு திரும்பினார்.

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சத்தியவேடு பகுதியில் அவருக்கு உதவி செய்வது போல நடித்து இருசக்கர வாகனத்தில் வந்தவர் வழிப்பறி செய்தார்.


மேலும், கத்தியால் சரமாரியாக தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆந்திர போலீசார், ஊரடங்கை சாதகமாக்கி துணிகர செயலில் ஈடுபட்ட விஜயகுமார், மணிகண்டன் ஆகிய இருவரை கைதுசெய்து பாதிரிவேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Also read... வாட்ஸ்அப் கால்... ஆதார் அட்டையின் ஜெராக்ஸை வைத்து நடந்த நூதன மோசடி
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading