Home /News /national /

5 நாட்களில் 4 கொலை... கேஜிஎப் ராக்கி பாய் போல் ஃபேமஸ் ஆக வேண்டுமென சீரியல் கில்லராக மாறிய இளைஞர்

5 நாட்களில் 4 கொலை... கேஜிஎப் ராக்கி பாய் போல் ஃபேமஸ் ஆக வேண்டுமென சீரியல் கில்லராக மாறிய இளைஞர்

மத்தியப் பிரதேசத்தில் சீரியல் கில்லர் கைது

மத்தியப் பிரதேசத்தில் சீரியல் கில்லர் கைது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நான்கு வாட்ச்மான்-களை கொலை செய்த சீரியல் கில்லரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India
    மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 5 நாட்களில் சாகர் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று வாட்ச்மேன்கள் மற்றும் போபால் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வாட்ச்மான் என்று நான்கு பேரைத் தொடர்ந்து கொலை செய்த 19 வயது இளைஞனை மத்தியப் பிரதேச காவல்துறையினர் விடியக்காலையில் சுற்றிவளைத்துக் கைதுசெய்துள்ளனர்.

    சாகர் பகுதியில் மூன்று நபரைக் கொலை செய்ததுடன் போபாலில் ஒருவரைக் கொலை செய்த பின்னரே காவல்துறை குற்றவாளியைப் பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்ட குற்றவாளி அதே சாகர் பகுதியில் உள்ள கெஸ்லி என்ற குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 19 வயது சிவபிரசாத் துருவ் என்ற இளைஞர் என்று தெரியவந்துள்ளது. காவல்துறை விசாரணையில் அதில் 4 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்ட குற்றவாளி இதனை வெறும் பிரலாபமாக வேண்டும் என்ற தான் செய்தேன் சென்று கூறியுள்ளார்.

    கே.ஜி.எப் படத்தைப் பார்த்து அதில் வரும் கதாபாத்திரம் ராக்கி பாய் போல் தானும் 'கேங்ஸ்டார்' ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் செய்ததாகக் கூறியுள்ளார். மேலும் பணம் சேர்த்து வைத்து எதிர்காலத்தில் போலீஸ்யை குறிவைக்கத் திட்டம் திட்டியுள்ளார்.
    அந்த இளைஞர் கடந்த 5 நாட்களில் கொலை செய்த 4 பேரில் ஒருவர் மட்டும் தப்பிப் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல் கட்ட விசாரணையில் சிவபிரசாத் துருவ் எட்டாம் வகுப்பு வரை படித்ததும், சிறிது நாள் கோவாவிலிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அவனை மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீரியல் கில்லர் சிக்கியது எப்படி:

    தூங்கிக்கொண்டிருந்த பாதுகாப்புப் பணியாளரைக் கொலை செய்யும் திட்டம் முதலில் கடந்த மே மாதம் கட்டுமான பணி இடத்தில் பாதுகாவலராக இருந்த ஒருவரைத் தூங்கிக்கொண்டிருந்த போது கொன்ற சம்பவத்தில் இருந்து தொடங்கியது. அந்த கொலையின் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து இரவு மூன்று பாதுகாவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியைக் கண்டுபிடிக்க காவல்துறை தனிப் பிரிவை அமைத்தது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது நபராக கொலை முயற்சியில் பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உதவியுடன் காவல்துறையினர் குற்றவாளியின் உருவத்தை வரைந்தனர்.

    சாகர் எஸ்.பி தருண் நாயக் அந்த வரைபடத்தில் உள்ளவரைப் பற்றி துப்புக்கெடுபவருக்கு 30000 ரூபாய் பரிசு அறிவித்தார். இந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரின் விவரங்களை வெளியிட்டனர். 50 இருந்து 60 வயதிற்குள்ளான உத்தம் ராஜக், கல்யாண் லோதி மற்றும் ஷம்புராம் துபே என்றவர்கள். இதில் கடைசி இரண்டு பேரைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட குற்றவாளி அந்த முதல் நபர் தான் கொள்ளவில்லை என்று போலீஸ்சாரிடம் கூறியுள்ளான்.

    Also Read : வெளிநாட்டில் வேலை செய்ய கைரேகை அறுவை சிகிச்சை.. ஹைதராபாத்தில் மோசடி அம்பலம்

    இந்த தொடர் கொலைகளை காவல்துறை செல்போனின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். ஷம்புராம் துபே என்ற நபர், குற்றவாளியால் இரண்டாவதாகக் கொலை செய்யப்பட்டவர். இவர் சாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கேன்டீன் அருகில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். இவரின் அருகில் ஒரு சிம் கார்டு இல்லாத தொலைபேசி கிடைத்தது. காவல்துறை அதை ஆய்வு செய்ததில் அது முதல் நாள் கொள்ளப்பட்ட கல்யாண் லோதி செல்போன் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கொல்லப்பட்ட அவரின் செல்போனை கொலையாளி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த செல்போன் சிக்னல் வைத்து வெள்ளிக்கிழமை காலை 3.30 மணியளவில் பேருந்து நிலையத்தில் வைத்து கொலையாளியைக் கைதுசெய்துள்ளனர்.

    ஆனால் காவல்துறை அவனைப் பிடிக்கும் சில மணி நேரம் முன்பு போபாலில் மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த பாதுகாவலரைக் கொன்று உள்ளான் என்று தெரியவந்துள்ளது. தற்போது மொத்தம் 3 பேரைக் கொலை மற்றும் ஒருவர் கொடூர கொலை முயற்சியில் கைதுசெய்யப்பட்ட அந்த சீரியல் கில்லரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். கடந்த மே நடந்த கொலையை இன்னும் அந்த குற்றவாளி ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Madhya pradesh, Man killed, Police

    அடுத்த செய்தி