பெண் குழந்தை கிணற்றில் வீசி கொலை - கடத்தல் நாடகம் ஆடிய தாய் உட்பட 3 பேர் கைது

மாதிரி படம்

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய், பாட்டி மற்றும் கொள்ளுபாட்டியை போலீசார் கைது செய்தனர். 

 • Share this:
  ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சின்னகொண்டிபூடியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ஸ்ரீஜனாவுக்கு 18 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் உடல்நலம் தேறி வீடு திரும்பிய ஸ்ரீஜனாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவருடைய தாயார் மகாலட்சுமி, பாட்டி கனகரத்னா ஆகியோர் ஸ்ரீஜனா மீது கோபம் அடைந்தனர்.

  பெண் குழந்தை பிறந்தது தொடர்பாக ஸ்ரீஜனாவுக்கும் அவருடைய தாய் மகாலட்சுமி, பாட்டி கனகரத்தினா ஆகியோருக்கு இடையே தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

  இந்த நிலையில் குழந்தையை கொலை செய்து விடுவது என்று திட்டம் தீட்டிய மூன்று பேரும் கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டுக்கு அருகில் உள்ள பாழும் கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்தனர். பின்னர் குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக அவர்கள் 3 பேரும் சேர்ந்து நாடகம் ஆடியுள்ளனர்.

  மேலும், குழந்தையை காணவில்லை என்று ஸ்ரீஜனா கணவர் சதீஸ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் கிராம மக்கள் ஸ்ரீஜனா வீட்டுக்கு அருகில் இருக்கும் பாழும் கிணற்றில் குழந்தை பிணமாக மிதப்பதாக போசாருக்கு தகவல் அளித்தனர்.

  விரைந்து சென்று குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையை துவக்கினார்கள்.

  அப்போது ஸ்ரீஜனா, அவருடைய தாய் மகாலட்சுமி, பாட்டி கனகரத்தினா ஆகியோர் பெண் குழந்தை என்பதால் பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது.

  Also read... மதுரையில் அதிர்ச்சி சம்பவம் - இளைஞரைக் கொலை செய்து காளிக்கு படைக்கப்பட்ட தலை

  குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக தாய் உட்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தையை பெண்குழந்தை என்ற காரணத்திற்காக அந்த குழந்தையின் தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய மூன்று பெண்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: