ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு லட்டு வழங்கிய காவல்துறை!

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

news18
Updated: August 4, 2019, 12:38 PM IST
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு லட்டு வழங்கிய காவல்துறை!
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
news18
Updated: August 4, 2019, 12:38 PM IST
கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு காவல்துறையினர் லட்டு வழங்கியுள்ளனர்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. உயிரிழப்புகளை தடுக்க மாநில அரசுகள், காவல்துறையினர் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

கட்டாய ஹெல்மெட் சட்டம், ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம், ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் இல்லை என பல முயற்சிகளை எடுத்து வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்


இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு காவல்துறையினர் லட்டு வழங்கியுள்ளனர். முதல்நாள் என்பதால் அறிவுரை அளிக்கும் விதமாக லட்டு வழங்குவதாகவும், இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்துள்ளனர்.

Also watch

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...