வரதட்சணைக்காக மருமகள் மீது கொடூரத் தாக்குதல்! வீடியோவால் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மீது வழக்கு

வரதட்சனை பிரச்னையின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூவரும் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர்.

news18
Updated: September 21, 2019, 4:07 PM IST
வரதட்சணைக்காக மருமகள் மீது கொடூரத் தாக்குதல்! வீடியோவால் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மீது வழக்கு
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி
news18
Updated: September 21, 2019, 4:07 PM IST
ஹைதராபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, அவரது மனைவி, அவரது மகன் ஆகியோர் சேர்ந்து அவர்களது மருமகளைத் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்தவர் ராமமோகன ராவ். சென்னை உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றிய அவர், 2016-ம் ஆண்டு ஹைதராபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் ராமமோகன ராவ், அவரது மனைவி, அவரது மகன் ஆகியோர் அவரது மருமகள் சிந்து சர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், ‘வரதட்சணை பிரச்னையின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூவரும் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர்’ என்று புகார் அளித்தார். இந்தச் சம்பவம் அப்போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
Loading...அந்த நிலையில், சிந்து சர்மாவை ராமமோகன ராவ், அவரது மனைவி, அவரது மகன் ஆகியோர் சேர்ந்து தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிந்து சர்மாவை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து தாக்குகின்றனர். இந்த வீடியோ ஆதாரத்தின் கீழ், முன்னாள் நீதிபதி ராமமோகன ராவ் உள்ளிட்டவர்களின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also see:

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...