ஹோம் /நியூஸ் /இந்தியா /

இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டிய டெல்லி கொலை வழக்கு - போலீசாரை திணறடிக்கும் கொலையாளி

இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டிய டெல்லி கொலை வழக்கு - போலீசாரை திணறடிக்கும் கொலையாளி

ஷ்ரதா - அஃப்தாப்

ஷ்ரதா - அஃப்தாப்

காதலியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற அஃப்தாப் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

காதலியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற அஃப்தாப் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அண்மையில் நாட்டையே உலுக்கியது ஷ்ரதா கொலை வழக்கு. ஷ்ரதாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த அவரது ஆண் நண்பர் அஃப்தாப் பூனாவாலைவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவரிடம் இருந்து உண்மையான தகவல்களை பெற முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். காவல்துறையினர் எது கேட்டாலும் வாய் திறப்பதில்லையாம். அப்படியே வாயை திறந்து பதில் சொன்னாலும் அதுவும் உண்மையாக இருப்பதில்லையாம். அதனால் விசாரணையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு  செல்ல முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில் தான் அஃப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளார்கள். இன்று பாலிகிராப் சோதனைகள் அஃப்தாப்புக்கு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த சோதனையையும் அஃப்தாப் மிகச் சாதாரணமாக எதிர்கொண்டிருக்கிறார். இதை எதிர் கொள்ள அவர் ஏற்கனவே பயிற்சி எடுத்திருக்கலாம் என்கிறார்கள காவல்துறையினர். இன்று பாலிகிராப் சோதனை முடிந்துவிட்டால் நாளை அஃப்தாப்புக்கு நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : 35 துண்டுகளாக காதலியை வெட்டி 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்த காதலன்.. டெல்லி முழுவதும் உடல் பாகத்தை வீசிய பகீர் சம்பவம்!

ஏற்கனவே முதற்கட்ட பாலிகிராப் சோதனைகள் அஃப்தாப்புக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரமே இரண்டாம் கட்ட சோதனை நடத்த இருந்ததாகவும், அஃப்தாப்புக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தாமதமாகி இன்று நடத்தப்பட்டதாகவும் தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்று பாலிகிராப் சோதனை முடிந்து விட்டால் நாளை பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் அஃப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

இரண்டு கட்ட பாலிகிராப் சோதகைளின் போதும் அஃப்தாப் மிகவும் மழுப்பலான பதிலையே சொல்லி வந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவக்கின்றனர். இதனால் உண்மையான மற்றும் காவல்துறைக்கு வேண்டிய தகவல்களை பெற முடியவில்லையாம். மேலும் விசாரணையின் போது அடிக்கடி அஃப்தாப் தும்மிக் கொண்டும், இருமிக் கொண்டும் இருந்ததாகவும், இதனால் தகவல்களை பதிவு செய்யும் கருவியால் துல்லியமாக செயல்பட முடியவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் முக்கியமான கேள்விகளுக்குரிய தகவல்களை பெற முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

அஃப்தாப் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக விசாரணையை அஃப்தாப் குழப்பி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் சந்தேகப்படும் பத்ரி என்கிற நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ஷ்ரதா கொலை செய்யப்பட்ட அதே மே மாதம் பத்ரியும் தனது வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசாா பத்ரியையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

First published:

Tags: Crime News, Delhi, Murder, Murder case