கேளிக்கை விடுதியில் ஆபாச நடனத்தை பாதியில் நிறுத்தி இளம் பெண்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ்

கேளிக்கை விடுதியில் ஆபாச நடனத்தை பாதியில் நிறுத்தி இளம் பெண்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ்
விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பெண்கள்
  • Share this:
கேளிக்கை விடுதியில் ஆபாச நடனமாடிய 21 இளம் பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கிளப் ஒன்றில் இளம் பெண்களை வைத்து ஆபாச நடன நடத்தப்படுவதாக ஜூப்லி ஹில்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு சென்ற போலீசார் கிளப்பில் நடந்துகொண்டிருந்த ஆபாச நடனத்தை நிறுத்தி, நடனமாடிய 21 இளம்பெண்களை ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல்நிலையத்தில் இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேளிக்கை விருந்து ஒன்றிற்காக தங்களை பிரசாத் என்பவர் கிளப்புக்கு அழைத்துவந்து நடனமாட வைத்ததாக தெரிவித்தனர்.


இந்தநிலையில் போலீஸ் வரும் தகவலை முன்னதாகவே அறிந்த கிளப் உரிமையாளர், அந்த கிளப்பை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்து கேளிக்கை விருந்து நடத்திய பிரசாத் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட 21 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கேளிக்கை விருந்து நடத்திய பிரசாத், கிளப் உரிமையாளர் ஆகியோர் கைதாக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: விஜய் படம் 150 நாட்கள் ஓடியதா... ‘அசுரன்’ மேடையில் அவுட் பேச்சு
First published: January 13, 2020, 7:02 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading