மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் மேற்கொண்ட ட்ராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இருப்பினும், விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்த பகுதியாக ரயில் நிறுத்தப் போராட்டத்தை தேசிய விவசாயிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் உட்கார்ந்து ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக பல்வேறு ரயில்களின் இயக்கம் தடைபட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாருக்குச் செல்லும் உட்கல் விரைவு ரயில் காஸியாபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் அம்பாலா, குருக்ஷேத்ரா, பானிபட், பஞ்சகுலா, ஃபடிகாபாத் ஆகிய பகுதியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் டெல்லி - லூதியானா, அம்ரிஸ்டர் வழித்தடத்தில் பல்வேறு பகுதியில் விவசாயிகள் தண்டவாளங்களில் உட்கார்ந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ரயில்வே காவல்துறையினரும், மாநில காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.