ஹோம் /நியூஸ் /இந்தியா /

4 மாத கர்ப்பிணி மனைவியை சுட்டுக் கொன்ற காவலர்... மதுபோதையில் அட்டூழியம்

4 மாத கர்ப்பிணி மனைவியை சுட்டுக் கொன்ற காவலர்... மதுபோதையில் அட்டூழியம்

காவலர் பிகி சேதியா தனது பணிக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி, மனைவியை சுட்டுள்ளார்.

காவலர் பிகி சேதியா தனது பணிக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி, மனைவியை சுட்டுள்ளார்.

காவலர் பிகி சேதியா தனது பணிக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி, மனைவியை சுட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  4 மாத கர்ப்பிணி மனைவியை காவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிகி சேதியா. இவர் 4 மாத கர்ப்பிணியான தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

  இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்துள்ளனர். இருவருக்கும் இடையே, குடும்ப பிரச்னை அடிக்கடி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு பிகி சேதியா தனது பணிக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி, மனைவியை சுட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் அதிகமானோர் காவலர் குடியிருப்பில் கூடினர்.

  இதையும் படிங்க - திருச்சுழி அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெட்டி படு கொலை - 2 பேர் கைது

  உடனடியாக காயமடைந்த கர்ப்பிணி மனைவி ஜெயஸ்ரீ மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, கொலையில் ஈடுபட்ட காவலர் பிகி சேதியா கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Crime News