காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்குமான மோதல் சம்பவங்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. குறிப்பாக சில நேரங்களில் போலீசாரின் வரம்பு மீறிய செயல்கள் காவல்துறையினருக்கே களங்கள் விளைவிப்பதாக உள்ளது.
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை - மகன் போலீசாரின் மிருகத்தனமான தாக்குதால் கடந்த ஆண்டு உயிரிழந்தது தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிளாயிட் போன்ற தாக்குதல் இது கொந்தளித்த பொதுமக்கள், இதில் தொடர்புடைய போலீசாருக்கு எதிரான கடுமையான தண்டனை வேண்டும் என வலியுறுத்தினர். சாத்தான்குளம் சம்பவம் கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் தான் நடைபெற்றது, அதைப் போலவே மற்றுமொரு வியாபாரி போலீஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை தருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் தன்னை இரண்டு நாட்களாக போலீஸ் நிலையத்திலும், வெளியிடத்தில் வைத்தும் காவலர்கள் கடுமையாக தாக்கி அநாகரிகமாகவும், மனிதநேயமற்ற வகையில் நடந்து கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
Also Read: அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் தந்தை!
அஜய் கன்வானே என்ற அந்த நபர் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இதனிடையே 3, 4 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக சந்தன் நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர், அஜய் கன்வானேவை கடந்த ஜூன் 4ம் தேதியன்று சிர்புர் எரி பகுதிக்கு கன்வானேவை அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரை பிளாஸ்டிக் பைப்புகளாலும், கட்டைகளாலும் ஈவு இரக்கமின்றி அடித்து துவைத்தெடுத்து பின்னர் விடுவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மறுநாளான ஜூன் 5ம் தேதி மீண்டும் அஜய் கன்வானேவை காவல்நிலையத்துக்கு கூட்டிச் சென்று அங்கு அவரை கட்டிவைத்து கண்மூடித்தனமாக அடித்துள்ளனர். அவருடைய கைகளிலும் ஏறி மிதித்து காயப்படுத்தியிருக்கின்றனர். குடிக்க தண்ணீர் கேட்ட போது மிகவும் அசுத்தமான தண்ணீரை கொடுத்திருக்கின்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரை காவலர்கள் விடுவித்திருக்கின்றனர்.
Also Read: வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா: ஓராண்டில் சொத்து மதிப்பு பாதியாக சரியக் காரணம் என்ன?
ஒரு வாரம் கழித்தும் அவரது உடலில் இருந்த காயங்கள் குணமாகாததையடுத்து காவல்நிலையத்தில் தன்னை அடித்த காவலர்கள் இருவர் மீதும் அஜய் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் புகாரை பதிவு செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் சந்த் ஜெயின் கூறினார்.
सागर में एक महिला की पिटाई का वीडियो वायरल हो रहा है, महिला अपनी बेटी के साथ बाहर निकली थी, मास्क नहीं पहना था बेटी ने भी मुंह पर सिर्फ स्कॉर्फ बांध रखा था। इस बीच पुलिस ने चेकिंग के दौरान गांधी चौक के पास उसे पकड़ लिया @ndtvindia @ndtv @manishndtv @alok_pandey @GargiRawat pic.twitter.com/rKwichtrpd
— Anurag Dwary (@Anurag_Dwary) May 19, 2021
கடந்த மே மாதம் இதே போன்று சாலையில் சென்ற தாய் - மகள் இருவரையும் வழிமறித்த காவல்துறையினர் முகக்கவசம் அணியாத தாய் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Atrocities of Police, Crime | குற்றச் செய்திகள், Madhya pradesh, Police