கையில் குழந்தை வைத்திருந்த நபர் மீது போலீசார் லத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்ற வாசகத்தில் இருக்கக்கூடிய கருத்து நடைமுறையில் பல நேரங்களில் போலீசாரிடம் இருப்பதில்லை. பொதுமக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டுதான் வருகின்றன. அந்த வகையில், கையில் குழந்தையை வைத்திருந்த நபர் மீது போலீசார் லத்தியால் கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேகத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் எனும் ஊரில் நேற்று (டிச 9) மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்பர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிலர் பிரச்னையில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த உள்ளூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார், அந்த மருத்துவமனையின் முன்பிருந்தவர்கள் மீது லத்திகளால் தாக்குதல் நடத்தினர். அப்போது கையில் குழந்தையுடன் இருந்த நபர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது..
Shocking scenes in UP.The @kanpurdehatpol raining lathis on a man with a child and then even trying to snatch the wailing kid.Cops claim man-a govt district hospital employee -is a‘regular nuisance maker’and bit the hand of a cop.Even if true, why such barbarism ? pic.twitter.com/dkGns5aA8S
காவல் ஆய்வாளர், கையில் குழந்தையை வைத்திருந்த நபர் மீது லத்தியால் பலமாக அடிப்பதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். தன்னை அடிக்கும் காவல் ஆய்வாளரை பார்த்து ‘குழந்தைக்கு காயம் ஏற்பட்டுவிடப்போகிறது’ என அந்த நபர் தொடர்ந்து கூறியபோதும் தாக்குதல் தொடர்ந்தது. இதனையடுத்து அங்கிருந்து அந்த நபர் குழந்தையுடன் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டிச் சென்ற போலீசார் குழந்தையை அவரின் கையில் இருந்து பறிக்க முயற்சித்துள்ளனர்.
Meanwhile … in even more surreal behaviour , cops claim they used ‘light’ force and tried to ‘protect’ the child . They also say man with child is brother of man who was ‘creating nuisance’ … https://t.co/wxuXuPfaTJ
இதனையடுத்து ‘இது தாயில்லாத குழந்தை’ என கெஞ்சி தன்னை விட்டுவிடுமாறு அந்த நபர் கூறுகிறார். பின்னர் அந்த நபரை போலீசார் விட்டுவிடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டி.எஸ்.பி அருண் குமார் சிங் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, அந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு வளாகத்தை மூடி பிரச்னையில் ஈடுபடுவதாக மருத்துவமனையில் இருந்து புகார் வந்ததால் அங்கு சென்றோம். கையில் குழந்தையை வைத்திருந்த நபர் அந்த மருத்துவமனையின் ஊழியர் தான், ஆனால் அவரும், அவரின் சகோதரரும் அவ்வப்போது தொந்தரவு செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து சிறிதளவு கடுமை காட்ட நேர்ந்தது. உண்மையில் குழந்தைக்கு அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே குழந்தையை அவரிடம் இருந்து கைப்பற்ற முயற்சித்தோம் என கூறினார். போலீசாரின் இந்த விளக்கம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்ததால் போலீசாருக்கு எதிர்ப்பு எழுந்தது.
जनपद कानपुर देहात में एक बच्चे को गोद में लिए हुए व्यक्ति पर पुलिस द्वारा लाठीचार्ज किये जाने के प्रकरण को अत्यंत गम्भीरता से लेते हुए @adgzonekanpur को प्रकरण की तत्काल जाँच करवाकर दोषी पुलिसकर्मियों के विरुद्ध कार्यवाही करने हेतु निर्देशित किया गया है।(1/2) pic.twitter.com/o4D0VMoHhU
இதையடுத்து மாவட்ட போலீஸ் நிர்வாகத்தினர், தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், இச்சம்பவம் குறித்து விசாரித்து தவறிழைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.