• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விட்டுவிடுங்கள் என கெஞ்சிய மாற்றுத்திறனாளி நபரை ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்த போலீசார்!

விட்டுவிடுங்கள் என கெஞ்சிய மாற்றுத்திறனாளி நபரை ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்த போலீசார்!

போலீஸ் தாக்குதல்

போலீஸ் தாக்குதல்

வலியில் அலறித் துடித்த அந்த மாற்றுத்திறனாளி நபர் தான் ஒரு ஏழை என்னை விட்டுவிடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சினார். அவரின் தலைமுடியை இழுத்து பிடித்து தர தரவென இழுத்துப் போட்டு ஈவு இரக்கமின்றி அடித்திருக்கின்றனர்.

  • Share this:
சாலையோரம் செருப்பு விற்பனை செய்து வந்த மாற்றுத்திறனாளி நபரை பொதுமக்கள் முன்னிலையிலேயே போலீசார் இருவர் ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை சீருடை அணிந்த போலீசார் இருவர் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்த பின்னணி அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றின் எதிரே சாலையோரமாக செருப்புக் கடை வைத்து செருப்பு விற்பனை செய்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர். இதனிடையே அவரது நடமாடும் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக இரு காவலர்கள் அந்த மாற்றுத்திறனாளி நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: கஜகஸ்தான் வீரரிடம் கடிவாங்கிய அனுபவத்தை பகிர்ந்த ரவிக்குமார் தாஹியா.. வலியை தாங்கிய வெற்றி வீரன்..

ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றிவிடவே அந்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் இருவரும் சேர்ந்து தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். அங்கு பொதுமக்கள் கூட்டமாக கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். வலியில் அலறித் துடித்த அந்த மாற்றுத்திறனாளி நபர் தான் ஒரு ஏழை என்னை விட்டுவிடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சினார். அவரின் தலைமுடியை இழுத்து பிடித்து தர தரவென இழுத்துப் போட்டு ஈவு இரக்கமின்றி அடித்திருக்கின்றனர்.



இதில் ஒருவர் இந்த மொத்த சம்பவத்தையும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார். கூட்டத்தில் அத்தனை பேர் வேடிக்கை பார்த்தபோதிலும் ஒருவர் கூட அந்த மாற்றுத்திறனாளி நபரை போலீசாரின் பிடியில் இருந்து விடுவிக்க முன்வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரத்தில் இருக்கும் போலீசார் சாமானியர்கள் மீது தொடர்ந்து அலட்சியப் போக்குடன் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ராஜஸ்தானில் இதே போன்று வாலிபர் ஒருவரின் தலையில் முட்டி போட்டு காவல்துறையினர் தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: