முகப்பு /செய்தி /இந்தியா / போக்குவரத்து விதிமீறி பைக் ஓட்டிய 22 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு... காவல்துறை அதிரடி

போக்குவரத்து விதிமீறி பைக் ஓட்டிய 22 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு... காவல்துறை அதிரடி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி பைக் ஓட்டிய 22 சிறுவர்களின் பெற்றோர் மீது காசியாபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

நாட்டில் சாலை வாகன விதிமீறல்களை கட்டுப்படுத்த மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சமீபத்தில் மாற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டம் விதிமீறல்களுக்கு பெரும் அபாரதத்தையும் தண்டனைகளையும் விதித்துள்ளது. இருப்பினும், சாலை விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 11-ம்  வகுப்பு படிக்கும் இரு பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு பைக்கில் சென்றுள்ளனர். பள்ளி முடிந்து இருவரும் வீடு திரும்பிய போது பைக்கை ராங் சைடில் ஓட்டி வந்துள்ளனர். அப்போது எதிரே வந்த லாரி பைக்கில் மோதியதில் 17 வயது மாணவர் ஆஷிஷ் சவுத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது நண்பர் இக்ஜோத் சிங் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியின் டிராபிக் ஏடிசிபி ராமானந்த் குஷ்வாஹா அதிரடி வாகன தணிக்கை சோதனைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று ஒரே நாளில் மட்டும் 18 குறைவாக பைக் ஓட்டிய 22 சிறுவர்களை காவல்துறை பிடித்துள்ளது.

அவர்களை பிடித்த காவல்துறை சிக்கிய சிறுவர்களின் பெற்றோரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. சிறுவர்களிடம் வாகனங்களை கொடுத்து விதிமீறல்களுக்கு பெற்றோர் துணை போகக் கூடாது எனக் கூறிய காவலர்கள், இந்த நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளது.

First published:

Tags: Bike Riders, Uttar pradesh