ஹோம் /நியூஸ் /இந்தியா /

பீர் குடித்துக்கொண்டே புல்லட் ரைட்.. கெத்தாக ரீல்ஸ் செய்த வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

பீர் குடித்துக்கொண்டே புல்லட் ரைட்.. கெத்தாக ரீல்ஸ் செய்த வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

ரீல்ஸ் வீடியோ எடுத்து போலீசிடம் மாட்டிய அனுஜ்

ரீல்ஸ் வீடியோ எடுத்து போலீசிடம் மாட்டிய அனுஜ்

பீர் அருந்திக்கொண்டே புல்லட் வண்டியை ஓட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

பைக் சாகச பிரியர்கள் பலர் சாலை விதிகள் மீறி சாகசங்கள் செய்து அதை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறு கெத்து காட்டுகிறேன் எனக் கூறி அவர்கள் செய்யும் சேட்டைகள் பின்னர் அவர்களுக்கே மோசமான பின்விளைவுகளை தருவதும் உண்டு. அப்படித்தான் பைக் பிரியர் ஒருவர் புல்லட் பைக்கில் ரீல்ஸ் செய்து போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில்  நூர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் என்ற இளைஞர். ரீல்ஸ் வீடியோ செய்வதை தனது ஹாபியாக கொண்ட இவர், தனது நண்பரான அபிஷேக் குமார் என்பவரின் புல்லட் வண்டியை எடுத்துக்கொண்டு டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் ரீல்ஸ் செய்ய வந்துள்ளார்.

அதன்படி, ஒரு கையில் புல்லட் வண்டியை பிடித்துக்கொண்டு ஓட்டிய அனுஜ் தன்னிடம் இருந்த பீர் பாட்டில் ஒன்றை மறுக்கையில் எடுத்தார். பின்னர் அந்த பீரை கெத்தாக குடித்துக்கொண்டே ஒற்றைக் கையில் வண்டி ஓட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை இணையத்தில் அப்லோட் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்,  காவல்துறையினரின் பார்வையிலும் சிக்கியது. வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன காவல்துறையினர் அனுஜின் விவரங்களை சேகரித்து  அவரை கைது செய்தனர்.அத்துடன் புல்லட் பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியது, அதிவேகமாக வண்டி ஓட்டியது, வண்டி ஓட்டிக்கொண்டே குடித்தது என பல பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.31,000 அபராதம் விதித்துள்ளனர்.சோசியல் மீடியாவில் மாஸ் காட்டும் ஆர்வத்தில் ரீல்ஸ் வீடியோ போட்ட அனுஜ் அதன் மூலமாகவே போலீசிடம் சிக்கியுள்ளார்.

First published:

Tags: Bike, Crime News, Uttar pradesh, Viral Video