Home /News /national /

ஒலி பெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்துங்கள் - மசூதிகளுக்கு கர்நாடகா போலீஸ் நோட்டீஸ்

ஒலி பெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்துங்கள் - மசூதிகளுக்கு கர்நாடகா போலீஸ் நோட்டீஸ்

ஒலி பெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்துங்கள் - 250 மசூதிகளுக்கு கர்நாடகா போலீஸ் நோட்டீஸ்

ஒலி பெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்துங்கள் - 250 மசூதிகளுக்கு கர்நாடகா போலீஸ் நோட்டீஸ்

உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதை மீறும் பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என உத்தரவிட்டுள்ளது.

    மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை உரிய அளவிலான சத்தத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கர்நாடகா மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஒலி மாசு ஏற்படுத்தும் விதமாக ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என கர்நாடகா மாநிலத்தில் உள்ள மசூதிகளுக்கு அம்மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகா காவல்துறை டிஜிபி பிரவீன் சூட் மாநிலத்தின் அனைத்து போலீஸ் கமிஷ்னர்கள், ஜஜிக்கள், எஸ்.பிக்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    காவல்துறை உத்தரவு

    அதில், மத வழிபாட்டுத் தலங்கள், பப்புகள், நைட் கிளப்புகள் மற்றும் பல பொது இடங்களில் ஒலி மாசு ஏற்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க - அல்கொய்தா எங்களை பற்றி பேச தேவையில்லை... மாணவி முஸ்கானின் தந்தை காட்டமான பதில்

    இதையடுத்து பெங்களூரு பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட மசூதிகளுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் மசூதிகள் தங்களின் ஒலிப்பெருக்கிகளின் சத்த அளவை முறையான டெசிபலுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதை மீறும் பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என உத்தரவிட்டுள்ளது.

    தொடரும் சர்ச்சைகள்

    முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள சில அமைப்புகள், மசூதிகளில் ஸ்பீக்கர்கள் கொண்டு எழுப்பப்படும் பாங்கு ஒலி மக்களுக்கு தொந்தரவு தருவதாக புகார் தெரிவித்துவருகின்றன. மசூதிகளிலிருந்து ஸ்பீக்கர்களை அகற்ற வேண்டும் என இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

    ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் உடை, ஹலால் உணவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் காரணமாக அங்கு சில மாதங்களாக மத ரீதியான சலசலப்புகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

    ராஜ் தாக்ரே எச்சரிக்கை

    கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் புத்தாண்டு பிறப்பு கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்ரே, மசூதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    மகாராஷ்டிரா மாநில அரசு மசூதிகளிலிருந்து கூம்பு ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் போட்டியாக இந்துக்கள் மத விழாக்கள் மற்றும் கோயில்களில் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமான் சாலிசா மந்திரத்தை ஒலிபரப்புவோம் என எச்சரிக்கும் விதமாக ராஜ் தாக்ரே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி