ஹைதராபாத் மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் 18 வயதுக்கு குறைவான சிறார்கள் என்ற நிலையில், தப்பி சென்ற ஒருவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவி மே 28ஆம் தேதி பப்பில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார். இந்த பார்டியில் பங்கேற்ற பின் வீடு திரும்பி கொண்டிருந்த மாணவிக்கு லிப்ட் தருவதாகக் கூறி சில இளைஞர்கள் காரில் ஏற்றியுள்ளனர். இந்த காரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு சென்ற இவர்கள் காரிலேயே மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர்.
பாதிப்புக்குள்ளான மாணவி வீடு திரும்பியது அவரது தந்தை மாணவியின் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் குறித்து விசாரித்துள்ளார். அதைத் தொடர்ந்து தயக்கம் மற்றும் அச்சத்துடன் மாணவி தனக்கு நேர்ந்த அவலம் குறித்து தந்தையிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி மற்றும் மாணவியின் வாக்குமூலங்கள் ஆகியவைகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை அடையாளம் கண்டது. அத்துடன் சம்பந்தப்பட்ட மெர்சீடஸ் பென்ஸ் காரை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக குற்றத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏவின் மகன் என்பதால் விசாரணை முறையாக நடைபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக தெலங்கானா மாநில பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதையும் படிங்க:
கூண்டோடு ராஜினாமா செய்த அமைச்சரவை - தேர்தலுக்கு முன் புதிய அணியை கட்டமைத்த முதலமைச்சர் நவீன் பட்நாயக்
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை இரண்டு நாள்களில் சமர்ப்பிக்க அம்மாநில தலைமை செயலாளர் சோமேஷ் குமார் மற்றும் காவல்துறை தலைவர் மஹேந்தர் ரெட்டி ஆகியோருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.