லிஃப்ட் தருவதாக கூறி 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் கைது!

பாழடைந்த கிணற்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது உடற்கூராய்வு முடிவில் தெரிய வந்தது.

news18
Updated: April 30, 2019, 4:12 PM IST
லிஃப்ட் தருவதாக கூறி 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் கைது!
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளின் சடலம்
news18
Updated: April 30, 2019, 4:12 PM IST
தெலங்கானா மாநிலத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி மாணவிகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஹாஜிபூர் கிராமத்தில், 12-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை 4 நாட்களுக்கு முன் காணவில்லை.

பெற்றோர் புகார் அளிக்கவே தேடுதலை தொடங்கிய போலீசார், அதே ஊரில், சீனிவாச ரெட்டி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் மாணவியின் பையை கண்டறிந்தனர்.

பாழடைந்த கிணற்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது உடற்கூராய்வு முடிவில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சீனிவாசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் ஒரு பெண்ணை கொலை செய்து அதே கிணற்றில் புதைத்ததாக கூறியுள்ளார்.

அதனையடுத்து கிணற்றில் இருந்து ஒரு மாணவியின் எலும்புக்கூடு தோண்டியெடுக்கப்பட்டது.

எலும்புக்கூடாக கிடந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பி.காம் படித்த பெண் என்பதும், கடந்த மாதம் அவர் காணாமல் போய் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காதல் விவகாரம் என நினைத்து கோபத்தில் பெற்றோர் புகார் அளிக்காமல் இருந்ததால், இந்தக் கொடூரம் வெளி உலகிற்கு தெரியாமல் போயுள்ளது.

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை, லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துச்சென்று சீனிவாசன் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கிணற்றில் மேலும் சடலங்கள் இருக்கிறதா என தேடப்பட்டு வரும் நிலையில், சீனிவாச ரெட்டியின் வீட்டை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீ வைத்து கொளுத்தினர்.

மேலும், 2015-ம் ஆண்டு அதே ஊரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் காணாமல் போன நிலையில், அதற்கும் சீனிவாசனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Also see...

First published: April 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...