ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய மற்றொரு பெண்...

சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய மற்றொரு பெண்...

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காஜூவாக்கா என்ற இடத்தில் சகோதரி வீட்டிற்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய மற்றொரு பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஐதராபாத்தை சேர்ந்தவரான சிரிஷா விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு நேற்று வந்துள்ளார்.

  பின்னர் தனது சகோதரியுடன் சிரிஷா காஜூவாக்காவில் இருக்கும் சமத் நகர் வழியாக நடந்து சென்ற போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிரிஷா மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர்.

  ஆசிட் வீச்சில் சிரிஷாவுக்கு கைகள் மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து தகவல் அறிந்த நியூ போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிரிஷா மீது தாக்குதல் நடத்தியது பெண் என்பது தெரியவந்துள்ளது.

  சிரிஷா மீது தாக்குதல் நடத்திய பெண் யார், எதற்காக தாக்குதல் நடத்தினார் இவர்கள் இருவருக்கும் இடையே வேறு என்ன பிரச்சனை உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Andhra Pradesh