ஹோம் /நியூஸ் /இந்தியா /

'போடா டேய்' பொங்கல் அன்று ஆனந்த் மஹிந்திராவின் தமிழ் ட்வீட் வைரல்

'போடா டேய்' பொங்கல் அன்று ஆனந்த் மஹிந்திராவின் தமிழ் ட்வீட் வைரல்

ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

Anand Mahnidra Tamil Tweet | தொழிலதிபர் ஆனந்த மஹேந்திரா பொங்கல் அன்று தமிழ் மொழியை பாராட்டி பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்த் மஹேந்திரா. இவரது சொத்து மதிப்பு 190 டாலர் என்று மதிப்பிடடப்பட்டுள்ளது. ஆனந்த் மஹேந்திரா வெற்றிகரமான தொழிலதிபராக இருப்பது போலவே சமூக வலைதளத்திலும் பலரது பாராட்டுகளை பெற்று வருபவர். ட்விட்டரில் அவரது பதிவுகளுக்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. சமூக சிந்தனை, தொழில் சார்ந்த அறிவிப்புகள் மட்டுமில்லாமல் சுவாரஸ்ய நிகழ்வுகள், நகைச்சுவை சம்பவங்கள் ஆகியவற்றையும் இவர் பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே பொங்கல் அன்று இவர் தமிழ் மொழி பற்றியும் தமிழ்நாட்டில் இவர் கல்வி பயின்றது குறித்தும் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் ஒரு ஆற்றல் மிகுந்த மொழி. உதாரணமாக, ஆங்கிலத்தில் ‘உங்களது விளக்கத்தை கேட்டு புரிந்துகொள்ள எனக்கு நேரம் இல்லை என நினைக்கிறேன். என்னை தனியாக விட்டால் பாராட்டுவேன்’ என்பதை தமிழில் ‘போடா டேய்’ என்று சொன்னால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தனது பள்ளிப் பருவக் காலத்தில் போடா டேய் என்ற சொல்லைத்தான் முதல் தமிழ் வார்த்தையாக கற்றுக்கொண்டதாகவும், அதை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பயன்படுத்தியதாகவும் ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்துள்ளார்.

Also Read : சிகரெட் பிடிக்க அனுமதி மறுப்பு: பேக்கரியை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்- பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சி

ஆனந்த் மஹேந்திரா உதகமண்டலத்தில் உள்ள லவ்டேல் பகுதியில் அமைந்துள்ள லாரன்ஸ் பள்ளியில் தனது பள்ளி படிப்பை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anand Mahindra, Pongal