• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்திய அரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பிய நிரவ் மோடியின் சகோதரி: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பலன்!

மத்திய அரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பிய நிரவ் மோடியின் சகோதரி: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பலன்!

நிரவ் மோடி

நிரவ் மோடி

இங்கிலாந்து வங்கிக் கணக்கு நிரவ் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் திறக்கப்பட்டது, அதில் உள்ள பணம் தன்னுடையது அல்ல என்றும் பூர்வி தெரிவித்தார்.

  • Share this:
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் நிரவ் மோடியின் சகோதரி, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 17.25 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியாக 2 பில்லியன் டாலர்கள் கடன் பெற்று இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியவர் நிரவ் மோடி (வயது 50). தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டு தற்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நிரவ் மோடியின் சகோதரியான பூர்வி மோடி (வயது 47) மற்றும் அவருடைய கணவர் மயாங்க் மேத்தா ஆகியோர் அப்ரூவர்களாக மாறியுள்ளனர். தங்கள் மீதான கிரிமினல் குற்ற நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளித்தால் அவர்கள் இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உதவுவதாக கடந்த அமலாக்கத்துறையை அணுகி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பூர்வி மோடி குற்ற வழக்குகளில் இருந்து விலக்கு பெற்றதை தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து மத்திய அரசுக்கு 17.25 கோடி ரூபாயை (USD 2316889.03) அனுப்பி வைத்துள்ளார்.

Also Read:   யூனிஸ் கானுக்கு கேப்டன் பதவி பறிபோக அஃப்ரிதி தான் காரணம்?

இந்த வங்கிக் கணக்கு நிரவ் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் திறக்கப்பட்டது என்றும் அதில் உள்ள பணம் தன்னுடையது அல்ல என்றும் பூர்வி தெரிவித்தார்.

தற்போது பூர்வி மோடியின் உதவியால் நிரவ் மோடியிடம் இருந்து மத்திய அரசுக்கு 17.25 கோடி ரூபாய் வந்து சேர்ந்துள்ளது என அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இதே வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற நிரவ் மோடியின் தாய் மாமனான மெகுல் சோக்ஸி டொமினிகாவில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Also read:   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குபிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்தது ஏன்? - கனே வில்லியம்சனின் சுவாரஸ்ய பதில்

இந்திய வங்கிகளை மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 22 ஆயிரத்து 585.83 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருந்துது. இது, வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பில் 80.45 சதவீதம் ஆகும். இவற்றில், 9,371 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, கடந்த மாதம் மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்றி அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் வங்கிகளை ஏமாற்றிவிட்டு தப்பிய தொழிலதிபர்களிடமிருந்து தற்போது இந்திய வங்கிகளுக்கு மீண்டும் பணம் திருப்பி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: