பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ரூ. 942 கோடி மோசடி

news18
Updated: March 13, 2018, 8:45 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ரூ. 942 கோடி மோசடி
நிரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்ஸி
news18
Updated: March 13, 2018, 8:45 PM IST
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான நிறுவனம்  பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மேலும் ரூ. 942 கோடி மோசடி செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, தனது தொழில் அபிவிருத்திக்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 12,700 கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இந்த மோசடியில் நிரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்ஸிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.  இந்நிலையில், பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் சார்பில் மோசடி குறித்து தணிக்கை நடைபெற்றது. இதில், மேலும் ரூ. 942 கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து, அந்த வங்கி தரப்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி குழுமம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 6,138 கோடி மோசடி செய்ததாக கருதப்பட்டது. இந்நிலையில், அந்த நிறுவனம் மேலும் ரூ. 942 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதன்மூலம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கீதாஞ்சலி குழுமம் செய்த மோசடியின் அளவு ரூ. 7.080 கோடியாக உயர்ந்துள்ளது என்று காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டது.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்