Home /News /national /

பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு: 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்த உள்துறை அமைச்சகம்!

பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு: 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்த உள்துறை அமைச்சகம்!

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள், விவிஐபியின் தீவிர பாதுகாப்பு அபாயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள், விவிஐபியின் தீவிர பாதுகாப்பு அபாயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள், விவிஐபியின் தீவிர பாதுகாப்பு அபாயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிரதமரின் பாதுகாப்பில்  குறைபாடு ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு விமானம் மூலம் நேற்று சென்றார். பின்னர் அங்கிருந்து ஹூசைனிவாலாவில் உள்ள தேசியத் தியாகிகள் நினைவிடத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செவல்வதாக இருந்தது. ஆனால் பதிண்டாவில் நேற்று மழை பெய்தது. இதனால் மோசமான வானிலையில் ஹெலிகாப்டர் இயக்குவதை தவிர்த்த பாதுகாப்பு அதிகாரிகள் ஹூசைனிவாலாவுக்கு சாலை மார்க்கமாக செல்ல கடைசி நேரத்தில் திட்டமிட்டு அதை செயல்படுத்தினர்.

    ஹூசைனிவாலாவில் இருந்து 30 கிலோமீட்டருக்கு முன்னதாக பிரதமர் சென்ற பாதையில் பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமரின் கார் மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அவரின் நிகழ்ச்சி ரத்தானது. இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    Also read:  இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

    உயிரோடு திரும்பி அனுப்பியதற்காக பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்படி விமான நிலைய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து, பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கும் பெரும் வார்த்தை போர் வெடித்தது.

    இதனிடையே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோரும் இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் போனில் கேட்டறிந்தனர். இந்த சூழலில் டெல்லி திரும்பிய பிரதமரிடம் குடியரசுத்தலைவர் நேரடியாக அழைத்து நிலைமையை விசாரித்தார். பிரதமரின் விளக்கத்தை கேட்டு, குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள், விவிஐபியின் தீவிர பாதுகாப்பு அபாயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பெரோஸ்பூருக்குச் சென்றபோது, ​​பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.

    இந்த மூன்று பேர் கொண்ட குழுவானது,ஸ்ரீ சுதிர் குமார் சக்சேனா (பாதுகாப்பு செயலர்) தலைமையில் செயல்படும். மேலும், இந்த குழு விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    Also read: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi, Punjab

    அடுத்த செய்தி