ஹோம் /நியூஸ் /இந்தியா /

4 நுழைவுவாயில்கள், 25 கண்காணிப்பு கோபுரங்கள்... ரூ.360 கோடியில் பிரதமருக்கு பிரமாண்ட வீடு கட்டும் மத்திய அரசு..!

4 நுழைவுவாயில்கள், 25 கண்காணிப்பு கோபுரங்கள்... ரூ.360 கோடியில் பிரதமருக்கு பிரமாண்ட வீடு கட்டும் மத்திய அரசு..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மத்திய பொதுப்பணித்துறை ரூ.360 கோடி மதிப்பிலான பிரதமர் குடியிருப்பு வளாகத்தை கட்டுவதற்கு டெண்டர் வழங்கப்படவுள்ளது. 21 மாதங்களுக்குள் கட்டி முடிப்பதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரதமருக்கு ரூ.360 கோடி ரூபாயில் புதிய பிரமாண்ட இல்லம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து டெண்டர் வெளியிட்டுள்ளது.

  தாரா ஷிகோ சாலையில் அமையவுள்ள பிரதமரின் புதிய இல்லம் இரண்டு தளங்களைக் கொண்டதாகவும், புதிய குடியிருப்பு வளாகத்தில் தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளம் மற்றும் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, புதிய இல்லம், மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும், இந்த வளாகத்தில் நான்கு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், அத்துடன் 25 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளது.

  பிரதமரின் இல்ல வளாகம், ராஷ்டிரபதி பவன் மற்றும் சவுத் பிளாக்கிற்கு அருகிலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்திற்கு எதிரே, தாரா ஷிகோ ரோடு, புது டெல்லியில் அமையவுள்ளது என்று மத்திய பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இந்த வளாகத்தில் பிரதமரின் இல்லம், பிரதமரின் உள்துறை அலுவலகம், சிறப்புப் பாதுகாப்புக் குழு அலுவலகம், உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் 21,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.

  Also Read: வங்கி விடுமுறை தினங்களில் மட்டும் ட்வீட் செய்வது ஏன்? விஜய்மல்லையாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

  மத்திய பொதுப்பணித்துறை ரூ.360 கோடி மதிப்பிலான பிரதமர் குடியிருப்பு வளாகத்தை கட்டுவதற்கு டெண்டர் வழங்கப்படவுள்ளது. 21 மாதங்களுக்குள் கட்டி முடிப்பதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குடியரசுத் தலைவர் இல்லம் மற்றும் சவுத் பிளாக்கிற்கு அடுத்ததாக மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வளாகம் கட்டப்படுகிறது. மேலும் பல நவீன வசதிகளுடன் பிரதமர் இல்லத்தை கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: PM Narendra Modi