பிகாரைப் போல தமிழக சட்டப்பேரவையிலும் NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

  • Share this:
    பிகார் சட்டமன்றத்தில் கடந்த 25-ம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மேற்கு வங்கம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பிகாரை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் NRCக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார்.

    இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

    பிகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பிகார் மாநிலத்தைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும்.



    அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.

    சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்.

    Also see:
    Published by:Rizwan
    First published: