புதுச்சேரியில் 15 தொகுதிகளில் பாமக தனித்து போட்டி : செயற்குழு கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் 15 தொகுதிகளில் பாமக தனித்து போட்டி : செயற்குழு கூட்டத்தில் முடிவு

பாமக

புதுச்சேரியில் பாமக 15 தொகுதியில் தனித்து போட்டியிடும் என செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில் தேசிய ஜனநாயாக கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு செய்து கொண்டனர், கூட்டணியில் உள்ள பாமகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் புதுச்சேரி பாமகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

  புதுச்சேரி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் மாநில துணை தலைவர் சத்திய நாராயணன் மற்றும் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு தொகுதி ஒதுக்கப்படாததால் தனித்து போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தினர், தொடர்ந்து புதுச்சேரியில் பாமக பலமாக உள்ள தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி புதுச்சேரியில் 12 தொகுதியிலும் காரைக்காலில் 3 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்சி தலைமையின் முடிவுக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: