பிரதமர் மோடி அறிவிக்க உள்ள புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன் தகவல்

கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கான புதிய திட்டம் ஒன்றை எதிர்வரும் 20ம் தேதி நரேந்திர மோடி அறிவிக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி அறிவிக்க உள்ள புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன் தகவல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • Share this:
கிராமப்புற மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்காக ‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ எனும் திட்டத்தை எதிர்வரும் ஜூன் 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தத் திட்டம் அறிவிக்கப்பட இருப்பது குறித்துப் பேசினார். அதில், கிராமப்புற மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ’கரீப் கல்யாண் ரோகர் அபியாண்’ எனும் மிகப்பெரும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வர முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், 125 நாட்களுக்குள் 116 மாவட்டகளுக்கு இந்தத் திட்டம் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், 50,000 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டு, வேலை வாய்ப்பை உருவாக்கவும் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.


Also see:

பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறிய அவர், சுமார் 25,000 பேர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளதாக குறிப்பிட்டார்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading