அசாமுக்கு வருகை தந்த மோடிக்கு எதிராக "Go Back Modi" போராட்டம்!

மணிப்பூர் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் நேரடியாகவே குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்துள்ளனர். மிசோரமில் குடியரசுதினம் புறக்கணிக்கப்பட்டது.

அசாமுக்கு வருகை தந்த மோடிக்கு எதிராக
மோடிக்கு எதிராக நடந்த கருப்புக்கொடி போராட்டம்
  • News18
  • Last Updated: February 9, 2019, 8:12 AM IST
  • Share this:
அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அம்மாநிலத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடந்துள்ளது.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மணிப்பூர் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் நேரடியாகவே இதனை எதிர்த்துள்ளனர். மிசோரமில் குடியரசுதினம் புறக்கணிக்கப்பட்டது.

இந்நிலையில், அசாம் மாநிலத்துக்கு நேற்று மாலை வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்திந்திய அசாம் மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் சென்ற மோடிக்கு, கருப்புக்கொடி காட்டி "Go Back Modi" என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மோடி சென்ற காருக்கு அருகிலேயே கருப்புக்கொடி போராட்டம் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

Also See..

First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்