பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி...!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி...!
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: November 12, 2019, 9:06 AM IST
  • Share this:
இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து பிரேசில்லா நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு 6-வது முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ரஷியா, பிரேசில் ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளன.

நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டு, எதிர்கால பொருளாதார வளர்ச்சி என்ற கருப்பொருளில் நாளை முதல் 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதன், முதல் நாளில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், உள்ளிட்ட பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுடன் தனித்தனியே இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


இதைத் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறையினா் கூட்டம், பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய அமர்வு, முழுமையான அமர்வு ஆகிய கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்கிறார். மாநாட்டின் முக்கிய அமர்வில், 'தற்காலச் சூழலில் நாடுகளின் இறையாண்மையைக் காப்பதற்கான வாய்ப்புகளும், சவால்களும்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முழுமையான அமா்வில், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதையடுத்து பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வா்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடா்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading