Home /News /national /

தீவிரமடையும் கொரோனா பரவல்.. இன்று மாலை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

தீவிரமடையும் கொரோனா பரவல்.. இன்று மாலை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

PM To Hold Meeting At 4:30 PM On Covid Situation: நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது.

    நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தற்போது 3,623 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,009 பேரும், டெல்லியல் 513 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் 3வது அலை உச்சமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Also read: கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.. ஊரடங்கு தேவை இல்லை: WHO தலைமை விஞ்ஞானி

    இதனிடையே, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,59,632 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,55,28,004 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 327 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,83,790 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் கொரோனா பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

    பிரதமர் மோடி கடைசியாக டிசம்பர் 24 அன்று ஒரு கொரோனா கூட்டத்தை நடத்தினார், இந்த கூட்டத்தில் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்த இந்தியா போராடி வருவதால் 'எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு : உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Omicron, PM Modi

    அடுத்த செய்தி