டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் கூட்டம்!

மாநில முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் கலந்துகொள்ளும் நிதிஆயோக் கூட்டத்தில் வறட்சி நிலவரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

news18
Updated: June 15, 2019, 7:15 AM IST
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் கூட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி
news18
Updated: June 15, 2019, 7:15 AM IST
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதிஆயோக் அமைப்பின் 5-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 2-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நிலையில், நிதிஆயோக் அமைப்பின் 5-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும், மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நிதிஆயோக் துணைத் தலைவர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், நாட்டில் நிலவும் வறட்சி, விவசாயிகள் பிரச்சினை, வேளாண்மை முன்னேற்றம், மழைநீர் சேகரிப்பு, கரீப் பருவ சாகுபடிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று நிதிஆயோக் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், மத்திய ஜிஎஸ்டி மூலம் தமிழக அரசுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை, வாட் வரி அமல்படுத்தியதால், தமிழக அரசுக்கு வந்துசேர வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், நிதிஆயோக் அமைப்பால் எந்தப் பயனும் இல்லை என்பதால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பகிர்ந்து அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா வலியுறுத்தியுள்ளார்.

நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்றிரவு டெல்லி சென்றடைந்தார்.

நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டபிறகு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...