• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி கட்டமைத்த சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி அரசு முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி கட்டமைத்த சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி அரசு முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

  • Share this:
    70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி கட்டமைத்த சொத்துக்களை மூன்று, நான்கு தொழிலதிபர்களுக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாங்கள் தனியார்மயமாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், தனியார்மயமாக்கும் முயற்சிகள் சரியானதாக இருக்க வேண்டும் என்று கருவதாகவும் கூறினார். ரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும், லாபம் ஈட்டிவரும் நிறுவனங்களையும் தனியார்மயமாக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

    பொருளாதாரத்தை அரசு தவறாக கையாண்டு வருவதாகவும், என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அரசின் சொத்துக்களை இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு வழங்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இதில் அவர்கள் அதிகாரம்பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    Also Read : அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி அரசின் சலுகைகளை பெற இது தான் ஒரே வழி!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், ரயில்வே தொழிற்சங்கங்கத்தினர் உள்ளிட்ட யாருடனும் கருத்து கேட்காமல், சொத்துக்களை குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தெரிவித்தார். ஒரு லட்சம் கோடி ரூபாய் கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி, 6 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், இது முறைகேடு என்றும் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

    பொதுத்துறையே இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அருணன் விமர்சித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: