ஹோம் /நியூஸ் /இந்தியா /

மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

Budget 2022 | இந்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும், இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

2022-23-ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது ஆகும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து பல தரப்பிலிருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2022: தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லை..

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும், இந்த பட்ஜெட் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.

பட்ஜெட் அம்சங்கள் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள், அதிக முதலீடு மற்றும் அதிக வளர்ச்சியைத் தருவதுடன், இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் தரக்கூடியவையாக அமையும் என மோடி தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சாதகமான, முன்னேற்றமிக்க பட்ஜெட்டை தயாரித்திருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மோடி பாராட்டினார். குறைந்தபட்ச ஆதரவு விலையாக 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகளுக்கு நேரடியாக அளிக்கும் அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ள மோடி, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் பட்ஜெட் உள்ளதாகவும், நிதிநிலை அறிக்கை குறித்து புதன்கிழமை விரிவாக பேச உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

Also read: தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இதனிடையே, நாடாளுமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மொத்தத்தில் பூஜ்ஜியம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.

மாதச்சம்பளம் வாங்குவோர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், இளைஞர்கள்,விவசாயிகள், சிறுகுறு மற்றும் நடத்தர தொழில்துறையினருக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

First published:

Tags: PM Modi, Union Budget 2022