விவசாயிகள், கிராமங்களை இதயத்தில் தாங்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

விவசாயிகள், கிராமங்களை இதயத்தில் தாங்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

மோடி

இந்த பட்ஜெட் தனி நபர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். ” என்றார் பிரதமர் மோடி.

 • Share this:
  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

  இது விவசாயிகளையும், கிராமஙக்ளையும் தன் இதயத்தில் கொண்டுள்ள பட்ஜெட் என்று புகழாரம் சூட்டியுள்ளார். முன்மாதிரியற்ற கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என்றார் பிரதமர் மோடி.

  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மோடி கூறும்போது, “கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்வினை சார்ந்ததல்ல, நல்வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் சாத்தியங்களையும் கொண்டதாக நேர்ம்றையான அணுகுமுறை கொண்டது.

  பட்ஜெட், விவசாயிகள் வருவாயைப் பெருக்குவதற்கான சாத்தியங்களை கவனமேற்கொண்டது. இந்தத் திசையில் செல்ல பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  விவசாயிகளுக்கு கடன்கள் எளிதில் கிடைக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருள் விற்பனை கமிட்டிகள் (மண்டி), வலுவடைவதற்கான பிரிவுகள் சட்டத்தில் உள்ளன. வேளாண் உள்கட்டமைப்பு நிதி மூலம் இது நிறைவேற்றப்படும். நிதி ஸ்திரத்தன்மையைத் தக்கவைக்கும் முகமாக அரசு பட்ஜெட் அளவை அதிகரித்துள்ளதே தவிர சாமானிய மக்கள் மீது சுமையை ஏற்றவில்லை.

  எங்கள் அரசு எப்போதும் பட்ஜெட்டை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திருக்கவே முயற்சி செய்கிறது. வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அணுகுமுறையை மேற்கொண்டுள்ளோம். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள், மனிதவள மேம்பாட்டில் புதிய உச்சம், உள்கட்டமைப்பில் புதிய பகுதிகள், தொழில்நுட்பத்தை நோக்கிய நடையில் பட்ஜெட்டில் புதிய சீர்த்திருத்தம் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளோம்.

  இந்த பட்ஜெட் தனி நபர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். ” என்றார் பிரதமர் மோடி.
  Published by:Muthukumar
  First published: