இந்தியாவுக்கு வருவதில் ஆர்வமாக உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியில் ட்வீட் செய்துள்ள நிலையில், விருந்தினர்களே கடவுள் என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வர உள்ளார். சற்று நேரத்தில் அகமதாபாத் விமான நிலையத்தை அவரது பிரத்யேக விமானம் வந்தடைய உள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் அவர் உரையாற்ற உள்ளார். பின்னர், சமர்பதி ஆசிரமம், தாஜ்மஹால் ஆகிய இடங்களுக்கும் அவர் செல்கிறார்.
ட்ரம்ப் வருகையின் போது இரு நாடுகளுக்கு இடையே பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வருவதில் ஆர்வமாக உள்ளேன். இன்னும் சில மணி நேரத்தில் உங்களை சந்திக்க இருக்கிறேன் என்று ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார்.
இதனை மேற்கோள் காட்டி, விருந்தினர்களே கடவுள் என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி சற்று முன்னதாக அகமதாபாத் வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.