ராமர் கோவில் விவகாரத்தில் சிலர் வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள் - பிரதமர் மோடி

”அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம், வன்முறை, பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் ஆகியவற்றில் இருந்து ஜம்மு- காஷ்மீர் விடுதலை அடைந்துள்ளது”

ராமர் கோவில் விவகாரத்தில் சிலர் வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள் - பிரதமர் மோடி
மோடி
  • News18
  • Last Updated: September 20, 2019, 10:50 AM IST
  • Share this:
ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவை மதித்து நடக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ் நடத்திய மகாஜனதேஷ் யாத்ரா எனப்படும் மக்கள் சந்திப்பு பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி நாசிக் நகரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி வைத்தார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம், வன்முறை, பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் ஆகியவற்றில் இருந்து ஜம்மு- காஷ்மீர் விடுதலை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.


ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ராமர் கோவில் விவகாரத்தில், சிலர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிவருவதாகவும். அவர்கள் எதற்காக இதுபோல் முட்டாள்தனமாக பேசுகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முடிவை மதித்து நடக்க வேண்டும் என்ற மோடி, நீதிமன்றத்தை மட்டுமே மக்கள் நம்பியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading