• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்' : பிரதமர் மோடி

'வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்' : பிரதமர் மோடி

முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தப் பணியில் மத தலைவர்கள், இளைஞர் அமைப்புகள், என்.சி.சி. என்.எஸ்.எஸ். மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  • Share this:
    வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தப் பணியில் மத தலைவர்கள், இளைஞர் அமைப்புகள், என்.சி.சி. என்.எஸ்.எஸ். மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    கொரோனா தடுப்பூசிகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக செலுத்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா அருணாச்சலபிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும், 40க்கும் அதிகமான மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர்.

    ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:
    கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளை மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் செய்திருக்கிறது. இப்போது வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த வேண்டும். இதனடிப்படையில் நாளொன்றுக்கு இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும்.

    குறிப்பாக கிராமப்புறங்களில் எந்தவொருவரையும் தவறவிடாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கையின்போது நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கென தனித்தனி வியூகங்களை அமைத்து நாம் செயலாற்ற வேண்டும். வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும்போது மதத்தலைவர்கள், இளைஞர் அமைப்பினர், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் உள்ளிட்டவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி முகாமின் போது இரண்டாவது டோசையும் மக்கள் செலுத்திக் கொண்டனர் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கொரோனா குறையும்போது நாம் ஏன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. எனவேதான் நாம் வீடுவீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    தடுப்பூசி முகாமுக்கு வந்து ஊசியை செலுத்த முடியாத நபர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. இதன் காரணமாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. முதலில் 50 சதவீதத்திற்கும் குறைவாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களிலும், தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: