எதிர்பாராத நிகழ்வுகளால் கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவன்...!

news18
Updated: September 7, 2019, 9:22 AM IST
எதிர்பாராத நிகழ்வுகளால் கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவன்...!
சிவனுக்கு ஆறுதல் கூறும் மோடி
news18
Updated: September 7, 2019, 9:22 AM IST
சந்திரயான் 2 லேண்டரில் இருந்து சிக்னல்கள் கிடைக்காததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாட்டு மக்களுமே நொறுங்கிப் போய் உள்ளனர்.

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், கட்டுப்பாட்டு மையத்தின் உடனான சிக்னலை இழந்தது. இதனால், திட்டமிட்டபடி, லேண்டர் தரையிறங்கியதா என்பதை விஞ்ஞானிகள் தெரிந்துகொள்ள முடியவில்லை.

எதிர்பாராத இந்த திடீர் நிகழ்வுகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


லேண்டர் தரையிறங்குவதை பார்க்க பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். இந்நிலையில், இன்று காலை அங்கிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் போது, இஸ்ரோ தலைவர் கே.சிவன் கண் கலங்கினார்.

சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமரும் சிறிது கண் கலங்கினார்.

First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...