• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி 

’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி 

Youtube Video

வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் தமிழக பாரம்பரியம் சிறப்பானது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

  • Share this:
    வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்று 69-வது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது, இந்தியர்கள் காலம் காலமாக கதைகளின் வழியாக வரலாறு, அறிவியல் மற்றும் தத்துவங்களை போதித்து வந்ததாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என்று குறிபிட்ட மோடி, தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர், புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். அதேபோல இந்திய விடுதலை நிகழ்வுகளை, இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு, கதை வடிவில் எடுத்துரைக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

    வேளாண் மசோதாக்கள் குறித்து பேசிய மோடி, இதனால் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்பனை செய்யும் சுதந்திரத்தை விவசாயிகள் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

    மேலும் படிக்க..நவராத்திரி திருவிழா ரத்து- குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு..



    தன்னிறைவு இந்தியாவின் அடித்தளமாக விளங்குவதே விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறைதான் என பிரதமர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா கால நெருக்கடி ஒவ்வொரு குடும்பத்தினருக்குள் இருக்கும் பிணைப்பை அதிகரித்துள்ளதாகவும், அனைவரும் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: