பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் - டீக்கடை முதல் பிரதமர் வரையிலான வளர்ச்சி வரலாறு..

இரண்டாவது முறையாக 2019ல் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்ததில் மோடி பங்கு முக்கியமானது. அரசியலை தவிர எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர் மோடி, அவர் எழுதி இதுவரை 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் - டீக்கடை முதல் பிரதமர் வரையிலான வளர்ச்சி வரலாறு..
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: September 17, 2020, 12:30 PM IST
  • Share this:
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, துல்லியத் தாக்குதல், பணமதிப்பிழப்பு என இந்திய வரலாற்றின் முக்கிய பக்கங்களை எழுதிய பெருமைக்குரியவர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.

குஜராத்தின் வத்நகரில் பிறந்த மோடி பள்ளியில் படித்து கொண்டிருந்த போதே, குடும்ப சூழல் காரணமாக தந்தையின் தேநீர் கடையில் பணிபுரிந்தார். 8 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தன் மூலம் அவருக்கு அரசியல் அறிமுகமாகிவிட்டது.


நாடு முழுக்க இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை, போராட்டக்காரராய் மோடியை மாற்றியது. பின்னர் பாஜக தொடங்கிய போது, அதில் தன்னை இணைத்து கொண்ட மோடி, ஒரே ஆண்டில் மாநில பொது செயலாளராக நியமிக்கப்பட்டதே அவரின் உழைப்பிற்கு சான்று.

கட்சியின் முக்கிய பேச்சாளராக கருதப்பட்ட மோடி, ஒரு கட்டத்தில் குஜராத் மாநில பாஜகவின் முகமாகவே மாறிப் போனார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்ற அத்வானியின் ரத யாத்திரையை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டதுடன், தேசிய அரசியலிலும் கால் பதித்தார்.

கட்சி பணிகளில் இருந்த ஆர்வம், மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை போன்றவை மூலம் மோடிக்கு குஜராத் மாநில முதலமைச்சர் பதவி தேடி வந்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட அவப்பெயருக்கு, தனது அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் மட்டுமே பதில் அளித்தார் மோடி.Also read... புதிய நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தம்.. ஏலத்தை வென்றது டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம்...

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அப்போது எழுந்த மோடி அலை, தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சுனாமியாக மாறி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தது.

இரண்டாவது முறையாக 2019-இல் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்ததில் மோடி பங்கு முக்கியமானது. அரசியலை தவிர எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர் மோடி, அவர் எழுதி இதுவரை 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் திறனும், வென்று காட்டும் அர்ப்பணிப்பும்தான் பிரதமர் மோடியின் வெற்றிக்கு அடிப்படை.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading