Home /News /national /

ஆடிக்கிருத்திகை.. முருகனின் அருள் கிடைக்கட்டும் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

ஆடிக்கிருத்திகை.. முருகனின் அருள் கிடைக்கட்டும் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

Aadi Krithigai 2022: முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் - பிரதமர் நரேந்திர மோடி

    ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானின் அருள் கிடைக்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.

    ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த மிக மிக விசேஷமான தினமாகும். எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆடி கிருத்திகை தினமான இன்று  விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் சிறிய கோவில்களில் பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரசித்திப் பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.



    இந்நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆடிக் கிருத்திகையையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், “ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Aadi, Murugan, PM Narendra Modi

    அடுத்த செய்தி