ஹோம் /நியூஸ் /இந்தியா /

அத்வானி 95வது பிறந்தநாள்... நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

அத்வானி 95வது பிறந்தநாள்... நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

மோடி அத்வானி

மோடி அத்வானி

அத்வானியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அத்வானியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியின் 95வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி ஆற்றிய பங்கு அளப்பறியது என்றும் மோடி தெரிவித்தார்.

  பாஜகவின் நீண்ட கால தலைவராக இருந்தவர் அத்வானி. தற்போது வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவர் விலகி இருக்கிறார். இந்நிலையில், அத்வானி தனது 95வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

  அத்வானியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அத்வானியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

  அத்வானியுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோடி, அத்வானி ஜியின் பிறந்த நாளில் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தேன். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவருடைய தொலைநோக்கு பார்வை, அறிவுத்திறனுக்காக நாடுமுழுவதும் அவர் மதிக்கப்படுகிறார். பாஜகவை கட்டியெழுப்பி வலுப்படுத்தியதில் அவரின் பங்களிப்பு மகத்தானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதையும் படிங்க: இந்திய சட்ட ஆணையத்தின் தலைவரானார் ஹிஜாப் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த ரிதுராஜ்!

  அடல் பிஹாரி வாஜ்பாயின் கீழ் துணைப் பிரதமராகப் பணியாற்றிய அத்வானி, கடந்த மூன்று தசாப்தங்களாக பாஜகவின் எழுச்சிக்குப் பின்னால் ஒரு முக்கிய சக்தியாகக் கருதப்படுகிறார் - மக்களவையில் இரண்டு இடங்களைக் கொண்ட ஒரு கட்சியிலிருந்து 1990 களின் பிற்பகுதியில் முதலில் கூட்டணி அரசாங்கங்களை அமைத்தது வரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்டது என பாஜக வளர்ச்சியின் முக்கிய தூண்களில் ஒருவராக அத்வானி கருதப்படுகிறார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: PM Narendra Modi