முகப்பு /செய்தி /இந்தியா / 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ... ஹெலிகாப்டர் ஆலையை திறந்து வைத்து பிரதம் மோடி சொன்ன குட்நியூஸ்!

6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ... ஹெலிகாப்டர் ஆலையை திறந்து வைத்து பிரதம் மோடி சொன்ன குட்நியூஸ்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tumkur, India

இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்து, அரசுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஆலையை திறந்து வைத்து, இலகுரக ஹெலிகாப்டர்களை அறிமுகப்படுத்தினார்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆலையாக கருதப்படும் இந்த ஆலையில், அடுத்த 20 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி மதிப்பில் 3 முதல் 15 டன் எடை கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக இலகுரக ஹெலிகாப்டர்களும் பின்னர் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடிய ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்பட உள்ளன.

முதல்கட்டமாக ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 60 ஆகவும், 90 ஆகவும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இதேபோன்று சென்னை-பெங்களுரு தொழில் வழித் தடத்தின் ஓர் அம்சமாக துமாகூர் தொழில்துறை நகரியத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிவைத்தார்.

First published:

Tags: Government jobs, Narendra Modi