முகப்பு /செய்தி /இந்தியா / பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது: பிரதமர் மோடி

பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது: பிரதமர் மோடி

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை

Partition horrors remembrance day: சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்துசென்ற நாளான ஆகஸ்ட் 14ம் தேதி நாடு முழுவதும் ‘ பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் இருந்து தனி நாடாக பாகிஸ்தான் 1947ம் ஆண்டு  ஆகஸ்ட் 14ம் தேதி பிரிந்து சென்றது. அந்த நாளை அந்நாட்டு சுதந்திர தினமாக கொண்டாடுகிறது. அதேவேளையில்,  இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வலிகளை நினைவுக்கூரும் விதமாக இந்தியாவில் அந்நாள் பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது இந்தியர்களின் துன்பங்கள் மற்றும் தியாகங்களை தேசத்திற்கு நினைவூட்டும் வகையில் இந்த நாள் பிரிவினை பயங்கர நினைவு தினமாக நினைவுகூரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அறிவித்தார்.

பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. லட்சக்கணக்கான நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர். பலர் வெறுப்பு மற்றும் வன்முறையால் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படும்" என்று பிரதமர் மோடி ஆகஸ்ட் 14, 2021 அன்று ட்வீட் செய்திருந்தார்.

சமூக பிளவுகள், நல்லிணக்கமின்மை என்ற விஷத்தை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித அதிகாரம் ஆகியவற்றின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் நமக்கு நினைவூட்டட்டும் என்றும் பதிவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே இன்று பிரிவினை பயங்கர நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா புதுதில்லியில் இன்று நடைபெறும் மௌனப் பேரணியில் பங்கேற்கிறார். மௌன அணிவகுப்பு ஜந்தர் மந்தரில் இருந்து தொடங்கி கன்னாட் பிளேஸ் ஏ பிளாக்கில் முடிவடையும் என்று I தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையில் இந்த நாளை அனுசரிக்க அரசு மாநில அளவிலான திட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் பிரிவினையின் போது உயிரிழந்த மற்றும் வீடுகளை விட்டு வெளியேறிய அனைவருக்கும் உரிய அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது என்று முதல்வர் கட்டார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம் இல்லாத தேசங்கள் பற்றித் தெரியுமா?

கிழக்கு கடற்கரை ரயில்வேயும் (ECoR) புவனேஸ்வரில் பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

இதை முன்னிட்டு புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் கண்காட்சி நடத்த உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்ள உள்ளார்.

பூரி, புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் உட்பட கிழக்கு கடற்கரை ரயில்வேயின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களிலும் இந்த நாளைக் குறிக்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: BJP, Independence day, India and Pakistan, Indian Railways, PM Narendra Modi