தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 30-ல் புதுவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி

கடந்த 30 நாட்களில் பாண்டிச்சேரிக்கு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக வருகை தர இருக்கிறார். பாண்டிச்சேரிக்கு ஒரு முறைக்கு மேல் வருகை தரும் முதல் பிரதமர் நரேந்திர மோடி தான்.

  • Share this:
தேர்தல் பரப்புரைக்காக வரும் மார்ச் 30ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருகை தர இருப்பதாக புதுவை பாஜக பொதுச் செயலாளர் ஏம்பலம் ஆர்.செல்வம் தெரிவித்தார்.

ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள புதுவை மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 30ம் தேதி புதுவை வர இருப்பதாகவும் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் ஆங்கிலோ ஃபிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற இருப்பதாகவும் புதுவை பாஜக பொதுச் செயலாளர் ஏம்பலம் ஆர்.செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.கடந்த 30 நாட்களில் பாண்டிச்சேரிக்கு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக வருகை தர இருக்கிறார். பாண்டிச்சேரிக்கு ஒரு முறைக்கு மேல் வருகை தரும் முதல் பிரதமர் நரேந்திர மோடி தான்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் பாண்டிச்சேரிக்கு வந்தார்.

இதனிடையே மார்ச் 22ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரிக்கு வருகை தர இருக்கிறார். இதனை தொடர்ந்து மார்ச் 24ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு வந்து தேர்தல் அறிக்கையை வெளியிடுவார். இதே போல நடிகை கவுதமி நாளை புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக வருகிறார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஒர் அணியாகவும், மற்றோரு பக்கம் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஓர் அணியாகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: