Home /News /national /

பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் பிரமிக்க வைக்கும் கழுகு பார்வை வீடியோ

பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் பிரமிக்க வைக்கும் கழுகு பார்வை வீடியோ

சென்ட்ரல் விஸ்டா

சென்ட்ரல் விஸ்டா

Central Vista: ஆயிரத்து 125 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்தியா கேட் அருகே 35 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டாவின் கழுகு பார்வை வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக கவனம் ஈர்த்துள்ளது.

    புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமா், குடியரசுத் துணைத் தலைவா் இல்லங்கள், மத்திய அமைச்சகங்களின் செயலகம் ஆகியவற்றோடு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் செலவில் மத்திய நகா்புற வளா்ச்சித் துறை மேற்கொண்டது.

    இதில் ராஜ பாதையில் பொதுமக்களின் வசதிகளுக்காக சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. டெல்லியின் மையப் பகுதியில் உள்ள பாதை, மக்களையும் அரசையும் இணைக்கும் அடையாளமாகும். அரசின் திறந்த வெளி நிகழ்வுகளும், குடியரசு தின அணிவகுப்பும் இங்கு நடைபெறும்.

    மறுவடிவமைப்பு பெற்றுள்ள இந்த பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ராஜபாதையின் பெயரும் கடமை பாதை என்று மாற்றம் செய்யப்படுகிறது. செப்டம்பா் 9 -ஆம் தேதி முதல் பொதுமக்கள் பாதையில் அனுமதிக்கப்பட உள்ளனா். ராஜ பாதையை ஒட்டி, 3 புள்ளி 90 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், சுற்றிலும் பசுமையான புல்வெளி உருவாக்கப்பட்டுள்ளது. 15 புள்ளி 5 கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகளும் போடப்பட்டுள்ளன.

    ஆயிரத்து 125 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்தியா கேட் அருகே 35 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.74 புராதன மாடல் விளக்குகளோடு புதிதாக 900 மின் விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்தின் தன்மையைப் பராமரிக்க கான்கிரீட் தூண்களுக்கு பதிலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளை மணற்கல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன .



    புல்வெளிகளில் பொதுமக்களின் வசதிக்காக 5 விற்பனைப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 40 நடமாடும் வாகன விற்பனையாளா்கள் அனுமதிக்கப்படுவர்.ராஜ பாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன. பாதையின் இருபுறமும் இருந்த கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா பயணம் - குதிரையைப் பரிசு அளித்த அதிபர்!

    மொத்தம் 19 ஏக்கரில் உள்ள கால்வாய்களில் ‘ஏரேட்டா்கள்’ போன்ற உள்கட்டமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. கால்வாய்களில் 16 பாலங்கள் போடப்பட்டு கிருஷி பவன், வணியா பவன் அருகில் உள்ள இரண்டு கால்வாய்களில் மட்டும் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரின் பயன்பாடாட்டுக்காக மொத்தம் 64 கழிவறை வசதிகள் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக அளவில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனர்.

     

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Central Vista, Delhi, PM Narendra Modi

    அடுத்த செய்தி