தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு கொரோனா தொற்று: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை

தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு கொரோனா தொற்று: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சியில் நாளை மதியம் ஆலோசனை நடத்துகிறார்.

  • Share this:
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதன்படி,  ஒரே நாளில் 836 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 480 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 51 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சியில் நாளை மதியம் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.

Must Read : நானும் எனது கணவரும் அரசியலில் இருந்து விலகுகிறோம் - அதிமுக எம்.எல்.ஏ அறிக்கையால் பரபரப்பு

 

கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: