அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு இந்தியா செய்த மிகப்பெரிய சாதனை மிஷன் சக்தி - மோடி

இதுவரையில் சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளன. இச்சாதனையைப் படைத்த 4-ம் நாடு இந்தியா என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: March 27, 2019, 1:55 PM IST
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு இந்தியா செய்த மிகப்பெரிய சாதனை மிஷன் சக்தி - மோடி
பிரதமர் மோடி உரை
Web Desk | news18
Updated: March 27, 2019, 1:55 PM IST
கடினமான ‘மிஷன் சக்தி’ ஆப்பரேஷனில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி  அறிவித்துள்ளார். 



இன்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாடிய பிரதமர் மோடி, இந்தியா புதிய விண்வெளி சாதனையைப் படைத்துள்ளது என்று கூறினார். அதில்  ’மிஷன் சக்தி’ ஆப்பரேஷன் என்பது மிகக் கடினமானப் பணியாக இருந்தது. ஆனால், இன்று ஏவப்பட்ட 3 நிமிடங்களில் ‘மிஷன் சக்தி’ புதிய சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்தார். 




இன்று நம்மிடம் பல்வேறு துறைகளுக்கும் தேவையான விண்வெளி செயற்கைக்கோள்கள் உள்ளன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், வானிலை என எல்லாவற்றுக்கும்  செயற்கைகோள்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் இன்று ஏவப்பட்ட எதிர்ப்பு செயற்கைக்கோள் ஆயுதமான A-SAT, வட்டக் குறுக்களவு கொண்ட கோளப்பாதையில் வெற்றிகரமாக சென்றது என்று மகிழ்வுடன் கூறினார். அதனைத்தொடர்ந்து பேசியவர் இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக ‘மிஷன் சக்தி’ ஆப்பரேஷன் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
Loading...



மேலும் விண்வெளியில் சக்தி மிகுந்த சாதனையை இந்தியா இன்று (மார்ச் 27-ம் தேதி) படைத்துள்ளது. இதுவரையில் சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இச்சாதனையைச் செய்துள்ளன. இச்சாதனையைப் படைத்த 4-ம் நாடு இந்தியா என்றும் பெருமையாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...