முகப்பு /செய்தி /இந்தியா / ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - பிரதமர் மோடி

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நாட்டு மக்களும் நம்முடைய சிறு விவசாயிகளும் பயன்பட கூடிய வகையில், சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த மாதத்திற்கான மான் கி பாத் நிகழ்ச்சி  காலை 11 மணிக்கு தொடங்கியது. 

அதில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளில் தேசிய கொடி ஏற்றி புதுமையான முறையில் கொண்டாடியதற்கு பாராட்டு தெரிவித்தார்.

அமுத பெருவிழா மற்றும் சுதந்திர தினத்தன்று நாட்டின் கூட்டு வலிமையை நாம் பார்த்தோம் என கூறினார். மேலும் சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை கொண்டாடும் சுவராஜ் நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து நாட்டு மக்களை காப்பற்ற ஜலஜீவன் திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது என கூறினார். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக முயற்சியில் நாட்டு மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

நாட்டு மக்களும் நம்முடைய சிறு விவசாயிகளும் பயன்பட கூடிய வகையில், சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கூறினார்.

top videos
    First published:

    Tags: Independence day, Modi Radio speech, PM Modi