PM Narendra Modi Speech Live Update | கொரோனா 3-ம் அலைக்கு முன் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கண்ணுக்கு தெரியாத எதிரி உடன் இந்தியா போராடி வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு உதவிகள் குவிந்தன.

  • Share this:
    கொரோனா 3-வது அலைக்கு முன் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று மாலை  உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

    கொரோனா 2-வது அலையில் சிக்கி இந்தியா மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து உள்ளது. 100 ஆண்டுகள் இல்லாத பெறு தொற்றை உலகம் சந்தித்து உள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில் தடுப்பூசிகள் உதவியாக இருந்தது. நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட போது ரயில், டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது - பிரதமர் மோடி உரை

    கண்ணுக்கு தெரியாத எதிரி உடன் இந்தியா போராடி வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு உதவிகள் குவிந்தன. தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி வருகிறோம். நோக்கம் தெளிவானால், முடிவு சரியாகவே இருக்கும்.

    கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டன. சில நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு இதுவரை 24 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மூக்கு வழியாக சொட்டு மருந்ததாக தரும் தடுப்பு மருந்து சோதனை நடந்து வருகிறது. மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

    இந்தியாவில் கொரோனா 2-வது அலை திடீரென வந்தது. இதனை அரசியலாக்குவதா என்று கேள்வி எழுப்பினார். சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் விவகாரம். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது.

    ஜூன் 21 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். மாநிலங்களுக்கு 75 சதவீத கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். மாநில அரசுகள் தனியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தேவையில்லை என்றார். மேலும் தீபாவளி வரை ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published: