ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து..

ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து..

ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனை முதல்முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்வாகியுள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை கூறியுள்ளார்.

  இந்த உரையாடலில், இந்தியா- அமெரிக்கா இடையிலான நல்லுறவை பேணி காப்பது என இருவரும் உறுதி பூண்டுள்ளதாகவும், கொரோனா தடுப்பு, காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய கூட்டுறவு குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் கமலா ஹாரிசுக்கும் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர், அவரின் வெற்றி இந்திய-அமெரிக்க சமூக மக்களுக்கான உந்து சக்தி எனவும், இருநாடுகள் இடையிலான வலிமையான உறவுக்கான ஆதாரமாக விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

  இதற்கு ஜோ பைடன் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
  Published by:Vaijayanthi S
  First published: